லிங்குசாமி படத்தில் நாயகனாகும் சூரி?

11 புரட்டாசி 2023 திங்கள் 11:47 | பார்வைகள் : 6774
இயக்குனர் லிங்குசாமி தமிழில் ஆனந்தம், ரன், சன்டக்கோழி, பையா என பல கமர்ஷியல் வெற்றி படங்களை ரசிகர்களுக்கு தந்தவர். ஆனால், அவர் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் படத்தின் தோல்விக்கு பிறகு இன்னும் வெற்றி பாதைக்கு திரும்பவில்லை. கடைசியாக அவர் இயக்கிய தி வாரியர் படமும் அவருக்கு வெற்றியை தரவில்லை.
சமீபகாலமாக பையா 2 படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது. ஆனால், இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து வெற்றிமாறன் தயாரிப்பில் லிங்குசாமி புதிய படம் ஒன்றை இயக்குகிறாராம். இந்த படத்திற்கு கதை எழுதுவது வெற்றிமாறன் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.