உலகக்கோப்பை தகுதிச்சுற்று - பிரேசில் அணியின் அபார வெற்றி

9 புரட்டாசி 2023 சனி 11:49 | பார்வைகள் : 6592
பொலிவியாவுக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் பிரேசில் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Mangueirão மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பிரேசில் அணி ஆரம்பம் முதலே மிரட்டியது.
ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ரோட்ரிகோ ஒரு கோலும், 47வது நிமிடத்தில் ராபின்ஹா ஒரு கோலும் அடித்தனர்.
முதல் பாதியில் பொலிவியா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாம் பாதியின் 61வது நிமிடத்தில் தன்னிடம் வந்த பந்தை மின்னல் வேகத்தில் கோலாக மாற்றினார் நெய்மர்.
அதன் பின்னர் 78வது நிமிடத்தில் பொலிவியாவின் விக்டர் அப்ரேகோ அசத்தலாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 90+3வது நிமிடத்தில் நெய்மர் அசால்ட்டாக கோல் அடித்தார்.
இதன்மூலம் பிரேசில் அணி 5-1 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. அடுத்தபடியாக பிரேசில் அணி 13ஆம் திகதி பெரு அணியை சந்திக்கிறது.