இத்தாலிக்கு செல்ல முயன்ற இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

9 புரட்டாசி 2023 சனி 16:13 | பார்வைகள் : 8648
போலந்து வதிவிட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 06.45 மணியளவில் கட்டார் டோஹா நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL- 217 இல் ஏற முற்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பில் வசிக்கும் 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், தரகர் ஒருவருக்கு 4 மில்லியன் ரூபா பணம் செலுத்தி போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கிளியரன்ஸ் கவுன்டரில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சந்தேகத்தை எழுப்பியதை அடுத்து, சந்தேக நபரிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஆவணங்கள் மீதான தொழில்நுட்ப சோதனைகள் போலியானவை என உறுதி செய்யப்பட்டது.
சந்தேக நபரின் கைப் பையில் இருந்து இரண்டு போலி குடிவரவு முத்திரைகள், ஒரு இலங்கை குடிவரவு முத்திரை மற்றும் போலி கல்ஃப் ஏர்லைன்ஸ் விமான டிக்கெட்டுடன் மற்றொரு கடவுச்சீட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1