சனாதன தர்ம விவகாரத்தில் அரசியலை கொண்டு வரக்கூடாது - மல்லிகார்ஜுன கார்கே
10 புரட்டாசி 2023 ஞாயிறு 13:25 | பார்வைகள் : 4133
சனாதன தர்ம விவகாரத்தில் அரசியலை கொண்டு வரக்கூடாது என்று காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சனாதன தர்ம விவகாரத்தில் அரசியலை கொண்டு வரக்கூடாது. நாம் அனைவரும் ஒன்று என்று இருக்க வேண்டும்.சனாதன தர்ம விவகாரத்தில் எதிராளிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.
அதன் அர்த்தம் என்ன?. இதுபோன்ற அரசியலை நாங்கள் செய்யவில்லை. நான் அரசியலில் மதத்தை திணிக்க விரும்புவதில்லை. நான் அரசியலில் மதத்தை திணிக்க விரும்புவதில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்க இருப்பது பற்றி அறிந்துள்ளேன்.
ஜனதாதளம் (எஸ்) கட்சி தனது கொள்கையை மாற்றி கொள்வது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை. நாடாளுமன்ற தேர்தலை 28 கட்சிகள் ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள உள்ளது.
நாடு முழுவதும் 60 சதவீத வாக்குகளை பெற இந்தியா கூட்டணி இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.