Paristamil Navigation Paristamil advert login

நேட்டோவில் சுவீடன் இணைய சம்மதம் தெரிவித்த துருக்கி

நேட்டோவில் சுவீடன் இணைய  சம்மதம் தெரிவித்த துருக்கி

11 ஆடி 2023 செவ்வாய் 05:33 | பார்வைகள் : 5847


நேட்டோவில் புதிதாக நாடுகள் அங்கத்தும் பெறுவதற்கு ஏற்கெனவே அங்கத்துவம் வகிக்கும் அனைத்து நாடுகளினதும் சம்மதம் அளிக்க வேண்டும்.

நேட்டோவில் சுவீடன் அங்கத்துவம் பெறுவதற்கு துருக்கி சம்மதம் தெரிவிக்க மறுத்து வந்தது.

குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு சுவீடன் அடைக்கலம் கொடுத்தமையே இதற்குக் காரணம் என அறிவித்து இருந்தது.

இது தொடர்பாக பல மாதங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், நேற்று  திங்கட்கிழமை சுவீடனின் நேட்டோ அங்கத்துவத்துக்கு துருக்கி ஜனாதிபதி ரெஜெப் தையிப் ஏர்துவான் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இந்த அங்கீகாரம் துருக்கிய பாராளுமன்றத்தினாலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

நேட்டோ அமைப்பின் உச்சிமாநாடு லித்துவேனியாவில் இன்று நடைபெறவுள்ள நிலையில் துருக்கி இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இச்செய்தியினால் தானட மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக சுவீடனின் பிரதமர் உல் கிறிஸ்டர்ஸ்சன் தெரிவித்துள்ளார்.

நேட்டோவின் 32 ஆவது நாடாக சுவீடன் இணையவுள்ளது.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்