உலகளாவிய ரீதியில்செயலிழந்த இன்ஸ்டாகிராம்!

9 பங்குனி 2023 வியாழன் 10:48 | பார்வைகள் : 13107
உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழந்துள்ளது.
செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.com ஐ மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, 46,000 க்கும் மேற்பட்ட பயனர்கள், இன்ஸ்டாகிராம் புகைப்பட-பகிர்வு தளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக முறைப்பாடு அளித்துள்ளனர்.இங்கிலாந்தில் சுமார் 2,000 பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து தலா 1,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது.
இந்த செயலிழப்புக்கான காரணம் குறித்து மெட்டா எந்த பதிலையும் வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025