சென்சிடிவான Whatsapp Status-களை ரிப்போர்ட் அடிக்கும் வசதி

4 பங்குனி 2023 சனி 09:09 | பார்வைகள் : 8620
Whatsapp status-களை ரிப்போர்ட் அடிக்கும் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
உலக முழுவதும் பெருவாரியான மக்கள் தங்களது தகவல் தொடர்பிற்கு சமூக வலைதள செயலியான வாட்ஸ்அப்-யே பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பில்லியன் கணக்கான மக்களை வாடிக்கையாளராக கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனமும் தங்களது பயனர்களின் தேவைகள் மற்றும் புதிய விருப்பங்களை அப்டேட் செய்து கொண்டே வருகின்றனர்.அந்த வகையில், குரூப் வீடியோ கால் பேசும் வசதியும், அதில் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் மியூட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்திருந்தது.
அதேபோல சமீபத்தில் பயனர்களால் அனுப்பப்படும் தவறான மெசேஜ்களை எடிட் செய்து கொள்ளும் வசதியையும் வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்த போவதாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில் Whatsapp status-களில் வைக்கப்படும் உள்ளடக்கங்கள் சென்சிடிவாக இருக்கும் பட்சத்தில் அதனை பயனர்கள் ரிப்போர்ட் செய்யும் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் பீட்டாவின் சமீபத்திய புதுப்பிப்புகள் நிறுவப்பட்ட பிறகு, சில பீட்டா சோதனையாளர்களுக்கு நிலை புதுப்பிப்புகளைப் புகார் அளிக்கும் திறன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.