Paristamil Navigation Paristamil advert login

ட்விட்டருடன் போட்டியிடும் புதிய நிறுவனம்!

ட்விட்டருடன் போட்டியிடும் புதிய நிறுவனம்!

2 பங்குனி 2023 வியாழன் 09:47 | பார்வைகள் : 9240


ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி, ட்விட்டருக்கு பதிலாக ப்ளூஸ்கை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய போது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக புதிதாக ப்ளூஸ்கை என்ற சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி ஆப்பிள் இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்