வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள புதிய 4 அப்டேட்கள்
16 மாசி 2023 வியாழன் 13:59 | பார்வைகள் : 10828
ஆண்ட்ராய்டு போன்களுக்கான புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் வழங்கியுள்ளது.
வாட்ஸ் அப் சில அற்புதமான புதிய அம்சங்களை பயனர்களுக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் நான்கு புதிய அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
முதலாவதாக வாட்ஸ்அப் செயலிகள் மூலம் ஆவணங்கள் பகிரப்படும் போது அதற்கான குறிப்பிட்ட தலைப்புகளை பயனர்களால் சேர்க்க முடியும்.
ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரை மற்றவர்களுக்கு பகிரலாம்.
இனி வரும் குழு அரட்டைகளில் இன்னும் நீண்ட விளக்கங்கள் அனுமதிக்கப்படும்.
தனிப்பயனாக்கப்பட்ட அவதார்களின் அறிமுகங்களை மக்கள் ஏற்கனவே பெற்று அதன் வேடிக்கையான புதிய அம்சங்களை பேசி வருகின்றனர்.
பொதுவாக வாட்ஸ்அப் நிறுவனம் அப்டேட்களை வெளியிடும் போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு என இருவருக்கும் இணைந்தவாறு புதிய அப்டேட்களை வெளியிடுவர்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய அப்டேட்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஐபோன் பயனர்கள் இந்த புதிய அப்டேட்டிற்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan