Paristamil Navigation Paristamil advert login

Smartphone-ல் 100 சதவீதம் வரை சார்ஜ் போட வேண்டாம்!

Smartphone-ல் 100 சதவீதம் வரை சார்ஜ் போட வேண்டாம்!

8 மாசி 2023 புதன் 16:47 | பார்வைகள் : 7775


செல்போன் இல்லாமல் வாழவே முடியாது என்ற நிலையில் பலரும் இன்று உள்ளனர் என கூறினால் அது மிகையாகாது.

நமது போனில் சார்ஜ் எப்போதும் முழுவதுமாக இருக்க வேண்டும் என்றே நினைப்போம், ஆனால் அது சாத்தியமில்லை.

ஆனால் சார்ஜை நீண்ட நேரம் நீட்டிக்க சில விடயங்களை கடைபிடிக்கலாம்.

பேட்டரி சார்ஜை முழுவதும் ட்ரை ஆகி செல்போன் ஆஃப் ஆகும் நிலைக்கு அடிக்கடி செல்லக் கூடாது. 

பேட்டரிக்கும் ஓர் அளவு உண்டு. 100% வரை செல்போனை சார்ஜ் போடவும் கூடாது.

30% - 85% என்ற அளவை வைத்துக்கொள்ளலாம். 85% பேட்டரி சார்ஜ் ஆனாலே போதுமானது. பேட்டரி லைஃப்க்கும் அது நல்லது.

அதாவது போனின் பேட்டரி விரைவில் செயலிழக்க முக்கிய காரணமே அதை 100 சதவீதத்தை கடந்தும் சார்ஜ் செய்வது தான், அதை இனி செய்யாதீர்கள்.

மேலும் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க திரையின் பிரகாசத்தை குறைப்பது, பயன்படுத்தாத  ஆப்ஸ்களை நீக்குவது, பயன்படுத்தாத நேரத்தில் இணையத்தை அணைத்து வைப்பது போன்ற விடயங்களை செய்யலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்