Paristamil Navigation Paristamil advert login

WhatsApp செயலியில் புதிதாக ஐந்து வசதிகள்!

WhatsApp செயலியில் புதிதாக ஐந்து வசதிகள்!

19 தை 2023 வியாழன் 09:43 | பார்வைகள் : 7568


வட்சப் செயலி புதிதாக ஐந்து வசதிகளை தமது செயலியில் வட்ஸ்அப்  நிறுவனம் இணைத்துள்ளது.

 
புதிய வசதிகளின் பிரகாரம் படங்களில் இருந்து எழுத்துருக்களை கொப்பி செய்து, அதனை பகிர முடியும். இந்த வசதி முதலில் ஐபோன்களில் (OS16) அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் ஏனைய தொலைபேசிகளுக்கும் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
படங்களை போர்வர்ட் செய்யும் போது அதனுடன் தகவல்களை அல்லது குறிப்புகளை இணைக்கவோ,  அல்லது ஏற்கனவே படத்துடன் இருக்கின்ற தகவல் மற்றும் குறிப்புகளை நீக்கிவிட்டு ஃபோர்வட் செய்ய முடியும்.
 
கூகுள் ட்ரைவ் பயன்படுத்தாமலேயே அன்ட்ரொயிட் தொலைபேசிகளில் இருந்து வட்ஸ்அப் தொடர்பாடல் பதிவுகளை (சாட் ஹிஸ்ட்ரி) பகிர்ந்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்பாடல் பதிவுகள் மூன்றாம் தரப்புக்கு தெரியாமல் பாதுகாக்கப்படுகிறது.
 
இப்போதும் பலர் வட்சப்களில் படங்கள், வீடியோக்களை ஸ்டேட்டசாக வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் சிலவகை அன்ட்ரொய்ட் தொலைபேசிகளில் குரல் பதிவினை வட்சப் ஸ்டேடசாக வைக்கும் வசதி அறிமுகமாகிறது.
 
சில நாடுகளில் சமுக வலைத்தளங்கள் முடக்கப்பட்டாலும், வட்சப்பை பயன்படுத்தக்கூடிய வகையிலான ப்ரொக்சி வசதியை வட்சப் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் ஊடாக வீ.பி.என் பாவிப்பது போல பயன்படுத்த முடியும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்