Apple அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்!

7 தை 2023 சனி 12:58 | பார்வைகள் : 12445
ஆப்பிள் நிறுவனம், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்(AI) விவரித்த ஆடியோ புத்தகங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.
செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்(AI) வளர்ச்சி உலகில் அடுத்தகட்டத்திற்கு முன்னேறி வருகிறது. உலகில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த செயற்கை நுண்ணறிவு குறித்து ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன.
இதேபோல் ஆப்பிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் விவரிக்கப்படும் ஆடியோ புத்தகங்களின் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிளின் புக்ஸ் பயன்பாட்டின் பயனர்கள், AI Narration என்று தேடினால் டிஜிட்டல் குரல் மூலம் கூறப்படும் மனித விவரிப்பாளரின் குரலில் இந்த ஆடியோ புத்தகங்களை அணுகமுடியும் என்று கூறப்படுகிறது.
இந்த அம்சம் தற்போது காதல் மற்றும் புனைவு கதைகளின் படைப்புகளுக்குக் கிடைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.