Paristamil Navigation Paristamil advert login

ஹக்கர்கள் மூலம் திருட்டில் ஈடுபடும் சீனா - ஆபத்தாக மாறும் இணையம்

ஹக்கர்கள் மூலம் திருட்டில் ஈடுபடும் சீனா - ஆபத்தாக மாறும் இணையம்

3 தை 2023 செவ்வாய் 00:03 | பார்வைகள் : 11873


 சீனா அதன் புவிசார் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக இணைய உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

 
சீனா ஆதரவு ஹக்கர்கள் சைபர் உளவு மற்றும் நிதி குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் என ஜியோ பொலிட்டிக் தெரிவித்துள்ளது.
 
சீனாவின் புவிசார் நிலைமையை வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர் என்பது குறித்து சந்தேகமில்லை என ஜியோ பொலிட்டிக் தெரிவித்துள்ளது.
 
சீனாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அந்த நாட்டின் ஹக்கர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர் என்பது இரகசியமான விடயமல்ல.
 
சீனா ஆதரவுடனான  ஹக்கர்களை நாட்;டின் வேவு பார்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக செயற்படும் அரை சுயாதீன குழுக்கள் என நிபுணர்கள் வர்ணிக்கின்றனர்.
 
அவ்வாறான குழுக்களில் ஒன்று ஏபிடி41 -சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் போன்ற பெயர்களால் இந்த குழுவை அழைக்கின்றன.
 
இந்த குழு சீனாவின் புலனாய்வு நடவடிக்கைகளில் முக்கியமானது என ஜியோ பொலிட்டிக் தெரிவிக்கின்றது.
 
அரசாங்கத்திற்காக இந்த குழு முக்கியமாக தனிப்பட்ட தகவல்களை சேகரித்தல் அமெரிக்க பிரஜைகள் நிறுவனங்கள் வர்த்தகங்கள்  குறித்த தகவல்களை சேகரித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.
 
இவற்றை சீனா தனது வேவு நடவடிக்கைகளிற்காக பயன்படுத்த முடியும்.
 
செங்குடுவை தளமாக கொண்ட இந்த ஹக்கர்கள் குழு அமெரிக்க கொவிட் நிவாரணத்தில் ஆகக்குறைந்தது 20 மில்லியன்  அமெரிக்க டொலர்களை திருடியது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.
 
2020 இல் ஆரம்பமானது இந்த திருட்டு 2000 கணக்குகள் திருடப்பட்டன40000 நிதி பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்