Twitterஇல் அறிமுகமாகவுள்ள புதிய நடைமுறை - நீல "tick" குறித்து மறுபரிசீலனை
 
                    1 கார்த்திகை 2022 செவ்வாய் 03:30 | பார்வைகள் : 9393
சில Twitter பயனீட்டாளர்களின் கணக்கில் நீல நிற 'tick' குறியீட்டைச் சேர்க்கும் நடைமுறை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நீலக் குறியீடு சேர்க்கப்படும் கணக்குகள் "verified account" என்று வகைப்படுத்தப்படும். பொதுவாகத் திரைப்பட நடிகர்கள், இசை நட்சத்திரங்கள் போன்ற பிரபலங்களுக்கு அத்தகைய நீலக் குறியீடுகள் வழங்கப்படுகின்றன.
அதற்கான நடைமுறை முழுமையாகப் புதுப்பிக்கப்படுவதாக Twitter நிறுவனத்தின் புதிய உரிமையாளர் இலோன் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.
எனினும் எத்தகைய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்பதை மஸ்க் விவரிக்கவில்லை.
இந்நிலையில் நீல "tick" குறியீடு Twitter தளத்தின் Twitter Blue திட்டத்தின்கீழ் ஒரு பகுதியாக மாற்றியமைக்கப்படலாம் என்று தொழில்நுட்பச் செய்தித் தளமான Platformer அதன் ஊகத்தை வெளியிட்டது.
தற்போது விருப்பத்தெரி்வாக இருக்கும் Twitter Blue அம்சத்துக்குப் பயனீட்டாளர்கள் மாதந்தோறும் 4.99 டாலர் சந்தா செலுத்தவேண்டும்.
Twitter Blue அம்சம் கடந்தாண்டு ஜூன் மாதம் அறிமுகம் கண்டது.
இதன்வழிப் பயனீட்டாளர்கள் அந்தச் சமூகத்தளத்தைப் பிரத்தியேகமாக அணுகலாம்....பதிவேற்றம் செய்யும் Tweetகளை மீண்டும் சரிப்படுத்துவதும் அத்தகைய பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படும் சிறப்பம்சங்களில் ஒன்று.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan