YouTubeஇல் அறிமுகமாகும் புதிய நடைமுறை!
28 ஐப்பசி 2022 வெள்ளி 12:35 | பார்வைகள் : 8307
YouTubeஇல் காணொளிகளுக்கு பஞ்சமில்லை என்ற போதிலும் அதில் குறிப்பிட்டுச்சொல்வதென்றால், மருத்துவக் குறிப்புகள் அடங்கிய காணொளிகள் தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மையை எவ்வாறு உறுதிசெய்வது? இதனைக் கருத்தில் கொண்டு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது YouTube.
அதாவது மருத்துவர்கள், தாதியர், இதர சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் இனி தங்களது YouTube ஒளிவழிக்கான உரிமம் அல்லது சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என அது அறிவித்தது.
இதன்வழி YouTubeஇல் தவறானத் தகவல்கள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த முடியும் என YouTube நம்புகிறது.
மனநல நிபுணர்களும் விண்ணப்பம் செய்யலாம்.
இதன்வழி அவர்களது காணொளிகளைப் பயனீட்டாளர்கள் மிக எளிதில் பார்க்க முடியும் என YouTube கூறியது.
அமெரிக்கர்களில் 90 விழுக்காட்டினர் சுகாதாரத் தகவல்களைத் தேட சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என தேசிய மருத்துவப் பயிற்சிக் கழகம் கூறுகிறது.
கடந்தாண்டு COVID-19 தடுப்பூசிகளைச் சாடும் காணொளிகள், உலகச் சுகாதார நிறுவனம் அல்லது நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையங்களின் சுகாதார வழிகாட்டுதலுக்கு முரணான காணொளிகள் பகிரப்பட்டதற்காக YouTube கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
அதனால் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல் பதிவேற்றங்களுக்கு YouTube தடை விதித்தது.