Paristamil Navigation Paristamil advert login

iPhone 14 விற்பனையில் சரிவு - ஏமாற்றத்தில் Apple நிறுவனம்

 iPhone 14 விற்பனையில் சரிவு - ஏமாற்றத்தில் Apple நிறுவனம்

8 ஐப்பசி 2022 சனி 15:03 | பார்வைகள் : 13319


Apple நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு அதன் iPhone 14 ரகக் கைத்தொலைபேசியை வெளியிட்டது.
 
அதற்கான தேவை அதிகளவில் இருக்கும் என்று எண்ணி இவ்வாண்டுப் பிற்பாதியில் கைத்தொலைபேசிகளின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தது.
 
ஆனால் நிறுவனத்துக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
 
வாடிக்கையாளர்களின் தேவை Apple நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அதிகரிக்கவில்லை. 
 
கூடுதலாக 6 மில்லியன் கைத்தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தைக் கைவிடும் நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது.
 
தற்போது Apple சென்ற ஆண்டைப் போலவே 90 மில்லியன் கைத்தொலைபேசிகளை மட்டுமே
உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. 
 
கைத்தொலைபேசிகளுக்கான தேவை குறைந்திருப்பதற்கு அதிகரிக்கும் பணவீக்கம், பொருளியல் மந்தநிலை குறித்த அச்சம், உக்ரேன் போர் ஆகியவை பங்களித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்