உலகின் முதலாவது பறக்கும் படகு அறிமுகம்

5 ஐப்பசி 2022 புதன் 08:29 | பார்வைகள் : 10029
உலகின் முதல் பறக்கும் படகு அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று அறிவித்தள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் பறக்கும் படகு ன் ‘தி ஜெட் ஜீரோஎமிசன்’ நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த படகு அலையின் மேற்பரப்பில் இருந்து 3 அடி உயரத்தில் பறக்கும். மணிக்கு 76 கி.மீ., வேகத்தில் செல்லும்.
ஐக்கிய நாடுகள் சபையின் 23ஆவது பருவநிலை மாற்றம் மாநாடு, அடுத்தாண்டு டுபாயில் நடைபெறவுள்ளது.
சூழலுக்கு பாதகம் ஏற்படாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படகு அறிமுகப்படுத்தப்படும் என சுவிட்சர்லாந்து நிறுவனத்துடன்ஒப்பந்தம் செய்துள்ள துபாயின் ஜினித் மரைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற படகை போல அல்லாமல் இது ஹைட்ரஜன் எரிபொருள் இயங்குவதால், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் வாயு வெளியேறுவதில்லை. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
இப்படகில் இருந்து சத்தம் (ஒலி), அதிர்வு ஏற்படாது. இது மகிழ்ச்சியான பயணத்துக்கு ஏற்றது.இதிலுள்ள இறக்கை அமைப்பு கீழ்நோக்கி இருக்கும். இது பயணிக்கும்போது தண்ணீரை கிழித்துக்கொண்டே செல்லும். ஹைட்ரஜன் ஆக்சிஜனோடு எரிந்து இதற்கு தேவையான ஹைட்ரஜன் எரிபொருள் கிடைக்கிறது.