Paristamil Navigation Paristamil advert login

ரோபோக்களுக்கு சிரிக்கக் கற்றுக் கொடுக்கும் விஞ்ஞானிகள்

ரோபோக்களுக்கு சிரிக்கக் கற்றுக் கொடுக்கும் விஞ்ஞானிகள்

26 புரட்டாசி 2022 திங்கள் 08:15 | பார்வைகள் : 6077


சிரிப்பினை சரியான நேரத்தில், சரியான முறையில் வெளிப்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) முறையை விஞ்ஞானிகள்  உருவாக்கி வருகின்றனர்.
 
இதன் வாயிலாக, மனிதர்களுக்கும் AI முறைகளுக்கும் இடையே நடக்கும் இயற்கை உரையாடல்களை இன்னும் மேம்படுத்த முடியும் என, சிரிக்கும் இயந்திர மனிதனை (ரோபோ) உருவாக்கிய கியோட்டோ (Kyoto) பல்கலைக்கழகத்தின் குழு கூறுகிறது. 
 
உரையாடக்கூடிய AI முறையின் கீழ், ஒருவர் மற்றொருவரின் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வதுதான் மிக முக்கிய அம்சம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
அத்தன்மையை ரோபோக்கள் சிரிப்பின் வாயிலாக மனிதர்களிடம் பகிர முடியும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
 
அதற்கு உதவக்கூடிய உரையாடல் தரவுகள் திரட்டபட்டுள்ளன. தனிச்சிரிப்பு, சமூகச் சிரிப்பு (அதாவது நகைச்சுவை அற்றது), நகைச்சுவையுடன் கூடிய சிரிப்பு ஆகியவற்றை இத்தரவுகள் உள்ளடக்கியிருப்பதாகவும் அக்குழு தெரிவித்தது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்