Paristamil Navigation Paristamil advert login

காட்டுப் பகுதியில் உள்ளீர்களா? இனி கவலை இல்லை என கூறும் Apple

காட்டுப் பகுதியில் உள்ளீர்களா? இனி கவலை இல்லை என கூறும் Apple

12 புரட்டாசி 2022 திங்கள் 13:27 | பார்வைகள் : 6135


Apple நிறுவனம் iPhone 14 ரகக் கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்துள்ளது.
 
சாதனங்களில் துணைக்கோளத்தைக் கொண்டு அவசரகாலச் செய்திகளை அனுப்பக்கூடிய புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
 
துணைக்கோளங்களின் தனித்துவமான அதிர்வுகளைத் தொடர்புகொள்ளக்கூடிய வகையில் கைத்தொலைபேசிகளின் வானலை வாங்கி மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
 
கைத்தொலைபேசியில் இணைய, சமிக்ஞைத் தொடர்பு இல்லை என்றாலும் பயனீட்டாளர்கள் அவசரகாலச் செய்திகளை அனுப்புவதற்கு அம்சம் வகைசெய்கிறது.
 
iPhone 14 ரகக் கைத்தொலைபேசிகளில் கார் விபத்துகளை அடையாளம் காணக்கூடிய உணர்கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. அவை அவசரச் சேவையைத் தொடர்புகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
 
புதிய கைத்தொலைபேசிகள் மேம்பட்ட படங்களை எடுக்கும்...விரைவாகச் செயல்படும்...அதன் மின்கலன் கூடுதல் நேரம் நீடிக்கும் என்றும் Apple கூறியுள்ளது.
 
Pro, Pro Max ரகங்களில் 48 megapixel கேமரா ஆற்றலை எதிர்பார்க்கலாம். iPhone 13 Pro, Pro Max ரகங்கள் 12 megapixel கேமரா ஆற்றலைக் கொண்டிருந்தன.
 
கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தவில்லை என்றாலும் அவற்றின் முகப்புத் திரை எப்போதும் இயங்கும் வகையில் ஓர் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
 
புதிய Apple Watch கைக்கடிகாரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் Ultra ரகத்தைக் கடலில் முக்குளிக்கும்போதும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
 
என்னதான் சாதனங்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும் விலைவாசி அதிகரிக்கும் வேளையில் பயனீட்டாளர்கள் ஈர்க்கப்படுவார்களா என்பது கேள்விக்குறியே.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்