Paristamil Navigation Paristamil advert login

இண்டர்நெட் இல்லாமல் WhatsApp பயன்படுத்த டிரிக்ஸ்

இண்டர்நெட் இல்லாமல் WhatsApp பயன்படுத்த டிரிக்ஸ்

1 ஆவணி 2022 திங்கள் 19:22 | பார்வைகள் : 9817


மிகவும் பிரபலமான செயலியான WhatsApp அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய செயலியாக மாறிவிட்டது. வாட்ஸ்அப் செயலிக்காகவே இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் கூட இருக்கின்றனர். இணையம் இல்லையென்றால் இந்த செயிலியை பயன்படுத்த முடியாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவது எப்படி? என்று பலரும் யோசித்திருக்க வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் இணையம் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும். 
 
இணையம் இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்துவது மிகவும் எளிதான விஷயம். இதற்காக உங்களுக்கு எந்த மூன்றாம் தரப்பு செயலியும் தேவையில்லை. இதனை நீங்கள் உங்கள் மொபைலில் செய்ய முடியாது. மடிக்கணினியில் WhatsApp Web மூலம் உங்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும். அதாவது தொலைப்பேசியில் இணையம் இல்லாதபோது, வாட்ஸ்அப் வெப்-ஐ டெஸ்க்டாப் அல்லது மடிக்கணிணியில் இணைத்துவிடுங்கள். அதில் இருக்கும் இண்டர்நெட் வசதியுடன் உங்கள் வாட்ஸ் அப் சாட்களை மேற்கொள்ளலாம். 
 
மிக எளிமையான விஷயம் என்றாலும், பலருக்கும் இந்த ஆப்சன் தெரிந்திருக்கவில்லை. தொலைபேசியில் இண்டர்நெட் இல்லையென்றால், வாட்ஸ் அப்பை முழுமையாக பயன்படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கின்றனர். அருகில் இருக்கும் இண்டர்நெட் சென்டருக்கு சென்று உங்கள் வாட்ஸ்அப்பை கனெக்ட் செய்து, வழக்கமான செய்திகளை பகிரலாம். அவசர காலத்தில் இந்த வழிமுறை உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எந்தவழியும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கூட, இப்படி ஒரு வழி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்