YouTube தொடர்பில் பலரும் அறியாத இரகசியம்!
26 ஆடி 2022 செவ்வாய் 19:32 | பார்வைகள் : 17461
உலகம் முழுவதும் வீடியோ பார்ப்பதற்கு பயன்படும் மிகவும் பிரபலமான செயலியாக யூ டியூப் இருக்கிறது. கம்பயூட்டர், லேப்டாப், மொபைல் என எதுவாக இருந்தாலும், யூ டியூப்பில் வீடியோவை பார்க்கலாம். அதேநேரத்தில் நீங்கள் பார்க்கும் யூடியூப் தகவல்கள் தொடர்பான ஹிஸ்டிரியும் உங்கள் சாதனத்தில் அழியாமல் அப்படியே இருக்கும். ஒரு சில நேரங்களில் இந்த ஹிஸ்டிரி உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஏனென்றால், நீங்கள் பயன்படுத்தும் கம்பயூட்டர் அல்லது மொபலை யாரேனும் வாங்கிப் பார்க்கும்போது, யூடியூப் ஹிஸ்டிரியை பார்க்க வாய்ப்பிருக்கிறது.
அப்போது, நீங்கள் என்னென்ன தகவல்களையெல்லாம் பார்த்திருக்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. சில தகவல்கள் உங்களுக்கு தேவை என்பதற்காக பார்த்திருப்பீர்கள். ஆனால், அது பிறருக்கு தவறாக தெரியலாம். அல்லது நீங்கள் பார்த்த தகவல்களைக் கொண்டு உங்களை சீண்டவோ அல்லது கேலி செய்யவோ வாய்ப்புகள் இருக்கின்றன. இப்படியான சூழ்நிலைகளைத் தவிர்க்க விரும்பினால், யூ டியூப் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது.
அதாவது தானாகவே ஹிஸ்டிரியை டெலிட் செய்து கொள்ளும் ஆப்சனெல்லாம் இருக்கிறது. இப்படியான அதில் இருக்கும் அம்சங்களை தெரிந்து கொண்டால், யூடியூப் ஹிஸ்டிரியைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளவே தேவையில்லை. சங்கடமான சூழ்நிலைகளும் ஏற்படாது.
முதலில் யூடியூப் பக்கத்துக்கு சென்று, இடதுபுறத்தில் உள்ள ஹிஸ்டரி செட்டிங்ஸை கிளிக் செய்யவும். அதன் பிறகு அனைத்து வரலாற்றையும் நிர்வகி (Manage all history) என்பதற்குச் செல்லவும். அதில், auto-delete history என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது, 3 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை என கால அளவு காட்டும். அந்த கால அளவுகளை தேர்தெடுக்கும்போது, ஹிஸ்டிரி தானாகவே அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் டெலிட்டாகிவிடும். மேனுவலாகவும் ஹிஸ்டிரியை டெலிட் செய்யலாம்.