வாட்ஸ் அப்பில் பாதுகாப்பு கருவிகள் அறிமுகம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?
2 ஆவணி 2023 புதன் 11:56 | பார்வைகள் : 5845
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள செயலிகளின் பயனர்களை தக்க வைக்கவும், புதிய பயனர்களை ஈர்க்கவும் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.
அதிலும் மெட்டா நிறுவனம் தன்னுடைய மெசேஜிங் செயலியான வாட்ஸ் அப்பில் 15 நாட்களுக்கு ஒருமுறை புதிய அப்டேட்டை வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் பாதுகாப்பு கருவிகள்(safety tools) அடங்கிய புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு கருவிகளை வாட்ஸ் அப் டெவலப்பர்கள் சோதனை செய்து வருவதாக WABetaInfo தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய வாட்ஸ் அப் பாதுகாப்பு கருவிகள் தெரியாத மற்றும் புதிய தொலைபேசி எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்த தகவலை தெரியப்படுத்துகிறது.
இத்தகைய அழைப்புகளின் போது இந்த பாதுகாப்பு கருவிகள் பாப்-அப் ஆகி அதனை என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கும்.
மேலும் ப்ரொபைல் புகைப்படம், போன் நம்பர், ரிப்போர்ட் செய்வது, பிளாக் செய்வது மற்றும் country code ஆகியவற்றை சரி பார்த்து அதை எவ்வாறு பாதுகாப்பாக வைப்பது என்பது குறித்து விளக்குகிறது.
அத்துடன் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் மெசேஜ்களை சம்பந்தப்பட்ட நபர் படித்தாரா என்பதை அனுப்பியவர் தெரிந்து கொள்வதை இந்த பாதுகாப்பு கருவிகள் தடுகிறது.
பயனர் அந்த எண்ணை contact list-ல் சேமித்தால் மட்டுமே மெசேஜை பயனர் படித்தாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.