Paristamil Navigation Paristamil advert login

வாட்ஸ் அப்பில் ஷார்ட் வீடியோ மெசேஜ்

வாட்ஸ் அப்பில் ஷார்ட் வீடியோ மெசேஜ்

29 ஆடி 2023 சனி 09:37 | பார்வைகள் : 6413


மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்பில் வீடியோ மெசேஜ் அனுப்பும் புதிய அம்சத்தை விரைவில் பயனர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
 
மெட்டா நிறுவனம் தங்களுடைய வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள செயலிகளில் புதிய புதிய அப்டேட்களை வழங்கி பயனர்களை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது.
 
அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப்-பில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்டில், ஷார்ட் வீடியோ மெசேஜ் என்கிற புதிய அம்சத்தை பயனர்களுக்காக மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
 
இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்களது மெசேஜ்களை குறுகிய வீடியோக்களாக பிறருக்கு அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
வாட்ஸ் அப்-பை பொறுத்தவரை பயனர்களால் டெக்ஸ்ட் அல்லது ஆடியோ வடிவிலேயே செய்திகளுக்கு ரிப்ளை அனுப்ப முடியும்.
 
ஆனால் இந்த புதிய அம்சத்தின் மூலம், பயனர்கள் இனி குறுகிய வீடியோக்களை பதிவு செய்து அதை உங்களுக்கு வந்த மெசேஜ்களுக்கு ரிப்ளே-யாக அனுப்ப முடியும்.
 
இந்த வீடியோ ரிப்ளே அம்சமானது அதிகபட்சமாக 60 வினாடிகள் வரை பதிவு செய்து ரிப்ளே-வாக அனுப்ப முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அத்துடன் இந்த வீடியோ மெசேஜ்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் மெசேஜ்களாக இருக்கும் என்று வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. 
 
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் என்பது நீங்கள் அனுப்பிய வீடியோ யாருக்கு அனுப்பப்பட்டதோ அவர்களும் நீங்களும் மட்டுமே இந்த வீடியோவை பார்க்க முடியும். 
 
அதை வேறு யாரும் பார்க்க முடியாது.
 
இது ஏற்கனவே ரோல் அவுட் செய்யப்பட்டு விட்ட நிலையில், விரைவில் அனைவரது வாட்ஸ் அப் செயலிகளிலும் இந்த அம்சத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்