AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தி கட்டுரைகள் உருவாக்கும் சோதனை முயற்சியில் கூகுள் நிறுவனம்!
22 ஆடி 2023 சனி 15:22 | பார்வைகள் : 5875
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்திகளை உருவாக்கும் சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது கூகுள் நிறுவனம். இதற்காக நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் மற்றும் தி வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல் நிறுவனத்திற்கு சொந்தமான நீயூஸ் காப்ஸ் போன்ற செய்தி நிறுவனங்களை இச்சோதனையில் ஈடுபடுத்தியுள்ளது. தகவல்களை எடுத்து கொண்டு அதற்கு ஏற்றார் போல செய்தியை வெளியிடுகின்றது.
இந்த AI சோதனையைப்பற்றி இந்நிறுவனங்களில் ஒன்று கூறுகையில், ”தானாக ஒரு வேலையை செய்வதன் மூலம் பத்திரிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாது , சிறந்த உதவி ஆளராகவும் அமையும் ” என்றனர்.
கூகுள் செய்தித் தொடர்பாளர் ஜென் க்ரைடர் அவரது அறிக்கையில் கூறுகையில், "செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் குறிப்பாக சிறிய செய்தி வெளியீட்டு நிறுவனங்களுடன இணைந்து பத்திரிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்த சோதனையின் முதற்கட்டமானது துவங்கியுள்ளது. மேலும், இது எந்த வகையிலும் பத்திரிக்கையாளரின் செய்தியை அறிக்கையிடுதல், அதனை உருவாக்குதல், அதன் உண்மைத்தன்மையை சரிப்பார்த்தல் போன்றவற்றிக்கு மாற்றாக அமைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவை உருவாக்கப்படவில்லை" என்றும் தெரிவித்தார்.
நியூஸ் கார்ப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சுந்தர் பிச்சை பத்திரிக்கை துறையில் கொண்டுள்ள ஈடுபாடு என்பது மிகவும் பாராட்டுக்குரியது. அது மட்டுமல்லாது கூகுளுக்கும் எங்களுக்கும் இருக்கும் உறவு என்பது மிகவும் வலுவானது" என்று கூறினார்.
இதழியல் பேராசிரியரும் ஊடக வர்ணனையாளருமான ஜெஃப் ஜார்விஸ் கூறுகையில், "கூகுளின் இந்த புதிய தொழில்நுட்பம் நிறைகளையும், குறைகளையும் கொண்டுள்ளது. மேலும் நியூயார்க் நகர பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள கிரேக் நியூமார்க் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசத்தில் தொழில் முனைவோர் பத்திரிகைக்கான டோ-நைட் மையத்தின் இயக்குனர் திரு. ஜார்விஸ் கூறுகையில், "இந்த தொழில்நுட்பம் ஒரு செய்தியில் உண்மைத்தண்மை மற்றும் நம்பகத்தன்மையை கொடுக்கிறது என்றால் மட்டுமே பத்திரிக்கையாளர்கள் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த முன் வர வேண்டும் " என்றார்.
மறுபுறம் கலாச்சார ரீதியாக பேசப்படும் போது, ஒரு குறிப்பிட்ட தலைப்பின் புரிதலை பற்றி குறிப்பிடும் போது பத்திரிக்கையாளர்கள் அல்லது செய்தி நிறுவனங்களால் தவறாக கையாளப்பட்டால் அது செயற்கை தொழில்நுட்பத்தை மட்டுமல்ல அச்செய்தியை வெளியிடும் செய்தி நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் பாதிக்கும் காரணியாக அமையும்.
இந்த AI தொழில்நுட்பம் பத்திரிகையாளர்களின் பணியினை பாதிக்குமோ என்ற அச்சம் இருப்பினும் அசோசியேட் பிரஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் கார்பர் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான கட்டுரைகளை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். இவை தங்களது கட்டுரைகளை தாங்களே எழுதும் பத்திரிகையாளர்கள் எழுதும் தன்மையில் ஒரு சிறிய பங்கே. உலகில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் செயற்கை தொழில்நுட்பத்தை எவ்வாறு சரியான முறையில் செய்திகளை உருவாக்காலாம் என்ற ஆழ்ந்த சிந்தனைகளில் ஈடுபட்டுள்ளது. அதிலும் தி டைம்ஸ், என்பிஆர் மற்றும் இன்சைடர் போன்ற நிறுவனங்கள் துல்லியமாக செய்தியை தருவது குறித்து தங்களது நிறுவன ஊழியர்களிடம் விவாதித்துள்ளனர்.
செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு கட்டுரைகளை எழுதினாலும் அவற்றின் உண்மைத்தன்மையை சரிபார்க்காவிட்டால் தவறான செய்திகளை பரப்பும் ஒரு கருவியாக இது நிச்சயம் மாற கூடும். பல்வேறு வெளியீட்டு நிறுவனங்கள் மேலும் பல நிறுவனங்கள் இந்த செயற்கை தொழில் நுட்பம் தங்களது தரவுகளை திருடுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இதில் NBC மற்றும் தி டைம்ஸ் போன்ற நிறுவனங்கள் இதை தெளிவுபடுத்தியுள்ளனர் .
இப்படி அசுர வளர்ச்சி அடைந்து வரும் தொழில் நுட்பம் மற்றவரின் பணி, உழைப்பினை சுரண்டுவதாக வருங்காலத்தில் மாறக்கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.