ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகிறதா..? சில வழிமுறைகள்
18 ஆடி 2023 செவ்வாய் 08:58 | பார்வைகள் : 5533
பொதுவாக ஸ்மார்ட்போன்களின் வெப்பநிலை 0 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் இருக்க வேண்டும், இந்த வெப்ப நிலைக்கு மேல் உங்கள் செல்போன் இருந்தால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
நாம் செய்யும் சின்ன சின்ன தவறுகளே செல்போன்களை சூடாக்குகிறது, செல்போன்களில் அதிகரிக்கும் வெப்பம் உங்கள் போன் பேட்டரிகளின் ஆயுட்காலத்தை குறைத்துவிடும்.
நீங்கள் ஐபோன் வைத்து இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு போன் வைத்து இருந்தாலும் சரி அதை சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அதற்கு முதலில் உங்களுக்கு எதற்காக செல்போன் சூடாகிறது என்ற காரணம் தெரிந்து இருக்க வேண்டும்.
செல்போன் சூடாவதற்கு முதல் காரணம் சூடான மற்றும் வெயில் படும் இடங்களில் செல்போனை நீண்ட நேரம் வைப்பது, இவ்வாறு சூடான இடங்களில் செல்போன்கள் வைக்கப்படும் போது செல்போன் பேட்டரிகளின் ஆயுள் வெகு சீக்கிரமாக குறைந்துவிடும்.
ஸ்மார்ட்போன்களை அடிக்கடி அப்டேட் செய்து, RAM செயல்பாட்டில் அதிக இடங்களை நிரப்பக் கூடிய செயலிகளையோ அல்லது கேம்களையோ நீண்ட நேரம் உபயோகத்தில் வைப்பது.
ஹை-குவாலிட்டி வீடியோக்களை நீண்ட நேரம் பார்ப்பது, உங்கள் ஸ்மார்ட்போனை மால்வேர் அல்லது வைரஸ்கள் தாக்கி இருந்தாலும் போனின் செயல்பாட்டு திறன் பாதிக்கப்பட்டு சூடாகலாம்.
சூடான நாட்களில் அதிக நேரம் செல்போன்களை காரில் வைத்துவிட்டு செல்ல கூடாது.
நேரடியாக சூரிய ஒளி படும் இடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் வைக்க கூடாது.
அதிகமான பேட்டரி பவர் மற்றும் RAM செயல்பாட்டை அதிகம் கோரும் செயலிகள் மற்றும் கேம்களை விளையாடமல் இருப்பது.
செல்போன் சூடாவதை உணரும் போது சிறிது நேரம் உங்கள் போனின் பேக் கவரை அகற்றி வைப்பது, இது உங்கள் போன் சூடாவதை சிறிதளவேனும் குறைக்கும்.
பயன்படுத்தாமல் பேக்ரவுண்டில் செயல்பாட்டில் இருக்கும் செயலிகளை நீக்குவது, இதற்கு பேட்டரி சேவ் மோட் ஆக்டிவேட் செய்வது.
இதுபோன்ற சில வழிமுறைகளை நாம் கடைபிடித்தாலே உங்கள் போன் சூடாகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.