Wow... பயனர்களின் தேவை கருதி கூகுள் நிறுவனம் எடுத்த அதிரடி மாற்றம்
27 ஆனி 2023 செவ்வாய் 09:50 | பார்வைகள் : 6607
பயனர்களின் தேவைக்கருதி கூகுள் நிறுவனம் கூகுள் மேப்பில் பல அதிரடியான மாற்றங்களை செய்துள்ளது.
இன்று உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் கூகுளைத்தான் சார்ந்து வாழும் நிலை உள்ளது.
எந்த இடத்திற்கு போக வேண்டும் என்று யாருடைய வழிக்காட்டுதல்கள் இல்லாமல் கூகுள் மேப்பை கொண்டு நாம் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்.
ஆட்டோ ஓட்டுநர் தொடங்கி பஸ் ஓட்டுநர் வரை இன்று கூகுள் மேப்பைதான் பயன்படுத்துகிறார்கள்.
இந்நிலையில், பயனர்களின் தேவைக்கருதி கூகுள் நிறுவனம் கூகுள் மேப்பில் பல அதிரடியாக புதிய அம்சங்களை செய்திருக்கிறது.
அது என்னவென்றால், ஒருவர் வாகனம் ஓட்டிச் செல்லும்போது, அவர் செல்லும் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டால், உடனே வேறு பாதையில் வாகனங்களை ஓட்டிச் செல்ல கூகுள் மேப்பில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், திடீரென தடை செய்யப்பட்ட சாலைகள், கட்டணச் சாலைகள் என பல விவரங்களை கூகுள் மேப் கொடுத்து விடும்.
அதேபோல், வாகனம் ஓட்டிச் செல்லும்போது ஒரு வீதியில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட வாகனம் வேகமாக சென்றால், உடனே கூகுள் மேப் எச்சரிக்கை சத்தத்தை கொடுக்கும்.
ஒருவர் வரைப்படத்தை மற்றொருவருக்கு பகிரப்படும்போது, அவர்கள் வந்து சேரும் நேரம், அவர்கள் போனில் உள்ள பட்டரி சதவீதம் அனைத்தும் கூகுள் மேப் பகிரும்.