செல்போன்களில் பரவும் புதிய Daam வைரஸ்
3 ஆனி 2023 சனி 12:22 | பார்வைகள் : 7644
ஸ்மார்ட்போன்களை தாக்கும் Daam என்ற புதிய ஆண்ட்ராய்டு மால்வேர் வைரஸ் வேகமாக பரவி வருவதாக தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
செல்போன்களை ஹேக் செய்ய கூடிய Daam என்ற புதிய வகை ஆண்ட்ராய்டு மால்வேர் வைரஸ் வேகமாக பரவி வருவதாக தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் தனது அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற இணைய பதிவிறக்கம் செய்யும் போது இந்த Daam வைரஸ் சாதனங்களில் நுழைந்து விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆண்ட்டி வைரஸ் போன்ற வைரஸ் தடுப்பு மென்பொருள் சாதனத்தில் இணைக்கப்பட்டு இருந்தாலும், இந்த Daam வைரஸ் அதை ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் சாதனங்களில் உள்ள தொலைபேசி அழைப்புகள், தொலைபேசி தொடர்கள், கோப்புகள், கேமரா புகைப்படங்கள், ஸ்கிரீன் ஷாட்கள், எஸ்எம்எஸ் ஆகியவற்றை அத்துமீறி கையாண்டு தகவல்களை திருடுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.