வாட்ஸ்அப்-இல் புதிய வசதி
23 வைகாசி 2023 செவ்வாய் 12:12 | பார்வைகள் : 7563
உலகிலே மொத்தமாக 2.24 பில்லியன் மக்கள் அதிகமாக வாட்ஸ்அப்பை மாதந்தோறும் பயன்படுத்துகின்றனர்.
இது உலகளாவிய மொபைல் மெசஞ்சர் பயன்பாடுகளில் ஒன்றாகும்.
அந்த வகையில் தற்போது புதிய ஒரு திட்டத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்திகளை எடிட் செய்யும் வசதி தற்போது அறிமுகமாகியுள்ளது. அதாவது வாட்ஸ்அப்பில் அனுப்பிய குறுஞ்செய்திகளை 15 நிமிடங்களுள் எடிட் செய்து மீண்டும் அனுப்ப முடியுமாம்.
இந்த முறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றியுள்ளது.
ஆகவே அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
எடிட் செய்ய வேண்டிய குறுஞ்செய்தியை அழுத்திப்பிடித்து, More என்ற option யை கிளிக் செய்ய வேண்டும்.
மேலும் அதில் Edit Message யை கிளிக் செய்து, அதை செய்து விட்டு பின் update செய்தால் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு விடும்.