ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ள மிகப்பெரிய மாற்றம்
15 வைகாசி 2023 திங்கள் 11:02 | பார்வைகள் : 7977
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன்15 மாடல் போன்களில் முதல் முறையாக USB Type C வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு வாழ்நாளில் ஒருமுறையாவது ஐபோன் வாங்கி அதனை பயன்படுத்தி விட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம், ஐபோன்களின் சில தனித்துவமான அமைப்புகள் பயனர்களுக்கு சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், ஐபோன்களின் தனித்துவமான ஜார்ஜிங் போர்ட் அமைப்பு, இதனால் பெரும்பாலான நேரங்களில் வெளி இடங்களில் சுற்றித் திரியும் பயனர்கள் குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர் கொண்டு விடுகின்றனர்.
இதுவரை ஐபோன் 14 வரையிலான மாடல்கள் வரை வெளிவந்து இருக்கும் நிலையில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன் 15 மாடலை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்த சில விஷயங்கள் கசிந்து ஐபோன் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கசிந்த தகவலின் அடிப்படையில் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய ஐபோன் 15 மாடல் போன்களில் முதல் முறையாக USB Type C வசதியை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது.
ஐபோன் 14 மாடல்கள் வரை லைட்னிங் போர்டு ஜார்ஜிங் அமைப்பே இருந்து வந்த நிலையில், தற்போது மிகப்பெரிய மாற்றத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஐபோன் 15ல் ஆப்பிள் நிறுவனம் தங்களுடைய Bionic A16 chipset-ஐ பொருத்தி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் ஐபோன் 15 மாடலின் தொடக்க விலை 79,900 இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதையும் ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.