Paristamil Navigation Paristamil advert login

WhatsApp தொடர்பில் எலான் மஸ்க் சர்ச்சை!

 WhatsApp தொடர்பில்  எலான் மஸ்க் சர்ச்சை!

11 வைகாசி 2023 வியாழன் 09:54 | பார்வைகள் : 7633


WhatsAppயை நம்ப முடியாது என்று டுவிட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
 
உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள்.
 
இந்நிலையில், பயனர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 
 
நான் தூங்கிக்கொண்டு காலை 6 மணிக்கு எழுந்து பார்த்தபோது எனது கையடக்க தொலைபேசியின் WhatsAppயை பின்னணியில் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. 
 
இது குறித்து அவர் டிவிட்டரில் ” வாட்ஸ்அப்பை நம்ப முடியாது” என பதிவிட்டுள்ளார். 
 
இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 
மேலும், பயனர் எழுப்பிய கேள்வியின் பதிவை பார்த்த வாட்ஸப் நிறுவனம்  கடந்த 24 மணித்தியாலம்  புகார் செய்த அந்த பொறியாளரை தொடர்பு கொண்டுள்ளோம்.
 
அவர் பிக்சல் ஃபோன் மற்றும் வாட்ஸ் அப்பில் சிக்கலைப் எங்களிடம் பதிவு செய்துள்ளார்.
 
இதற்கான ஸ்கிரீன் ஷாட்டையும் அவர் வெளியீட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.
 
இந்நிலையில் எலான் மஸ்க் பயனரின் அந்த பதிவிற்கு பதில் அளித்துள்ளார்.
 
இது ஆண்ட்ராய்டில் உள்ள பிழை என நம்புகிறோம். 
 
இது அவர்களின் தனியுரிமை ( Privacy) டாஷ்போர்டில் உள்ள தகவலை தவறாகப் பயன்படுத்துகிறது.
 
மேலும் இது குறித்து விசாரித்து சரி செய்யுமாறு கூகுலிடம் கேட்டுள்ளோம்” என அந்த பயனருக்கு பதில் அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்