Paristamil Navigation Paristamil advert login

ட்விட்டர் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா...?

 ட்விட்டர் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா...?

18 சித்திரை 2023 செவ்வாய் 11:36 | பார்வைகள் : 6578


உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் தான் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர்.
 
இவர் பல மாற்றங்களை செய்து வருகின்றார். கடந்த வாரங்களில் லோகோவை மாற்றி எலான் மஸ்க் தற்போது இன்னுமொரு புதிய அப்டேட்டை செய்துள்ளார்.
 
அதிகப்பட்சமாக 10,000 எழுத்துக்கள் வரை பயன்படுத்தும் புதிய வசதியை ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இதில் BOLD மற்றும் italic வடிவங்களில் ட்வீட்களின் எழுத்துகளை அமைக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இருப்பினும் தற்போதைய அப்டேட், ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் விடீயோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என கூறியுள்ளனர். 
 
பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அதிகளவிலான பயனர்களை பார்க்க செய்தால் பணம் சம்பாதிக்கலாம்.
மேலும், இதை பெறுவதற்கு செட்டிங்ஸில் உள்ள மானிடைஸ் (monetize) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். 
 
இதனால் வரும் பணத்தை ட்விட்டர் நிறுவனம் எடுக்காது. முற்றும் முழுவதுமாக அந்த பணம் உங்களுக்கு தான் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்