Paristamil Navigation Paristamil advert login

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டுமா...?

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டுமா...?

9 சித்திரை 2023 ஞாயிறு 12:07 | பார்வைகள் : 7413


உங்கள் கணக்கு நன்கு அறியப்பட்ட, அதிகம் தேடப்பட்ட நபர் எனவோ அல்லது, பிராண்ட் அல்லது நிறுவனத்தைக் குறிக்க வேண்டும்.
 
Instagram இன் வெரிபைட் நீல பேட்ஜ் அல்லது ப்ளூ டிக் பல ஆண்டுகளாக நிலையான ஒரு சின்னமாக மாறியுள்ளது.
 
சுயவிவரத்தில் உள்ள வெரிபைட் பேட்ஜ், கூட்டுப்பணிக்காக(collaboration) பிராண்டுகளை ஈர்க்கக்கூடும், இது உள்ளடக்கத்தைப் பணமாக்க படைப்பாளருக்கு உதவும்.
 
முதலில், உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு பப்ளிக்காக பொதுவில் இருக்க வேண்டும். 
 
சுயசரிதை மற்றும் சுயவிவரப் படத்தை வைத்திருக்க வேண்டும் மற்றும் செயலில் இருக்க வேண்டும். 
 
அமைப்புகளுக்குச் செல்வதன் மூலம் பயனர்கள் Instagram வெரிபைட் பேட்ஜுக்கு விண்ணப்பிக்கலாம்.இன்ஸ்டாகிராம் பயனர்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து ஒரு ஐடியை வழங்க வேண்டும்.
 
இன்ஸ்டாகிராம் விரைவில் விரும்பத்தக்க நீல பேட்ஜை (பொதுவாக ப்ளூ டிக் என அழைக்கப்படுகிறது) வாங்க அனுமதிக்கலாம்.
 
வெரிபைட் பேட்ஜ், "அவர்கள் பின்தொடர விரும்பும் பொது நபர்கள், பிரபலங்கள் மற்றும் பிராண்டுகளை" அடையாளம் காணவும், கண்டறியவும் உதவுகிறது என்று Instagram விளக்குகிறது.
 
இந்தியாவில் அறிமுகமாகியிருக்கும் இன்ஸ்டாகிராம் சப்ஸ்க்ரிப்ஷன் முறை!
இந்தியாவிலும் மெட்டா நிறுவனம் இந்த சலுகையினை அறிமுகப்படுத்தவுள்ளது.இதற்காக android பயனர்கள் மற்றும் வெப் பயனர்கள் தனித்தனி முறையில் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும்.
 
இதன்படி மெட்டா வாடிக்கையாளர்கள் தங்களது அக்கவுன்ட்களை வெரிபைட் அக்கவுண்டாக மாற்ற விரும்பும் பட்சத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு 1499 ரூபாயும், வெப் பயனர்களுக்கு 1099 ரூபாயும் கட்டணமாக அறவிடப்பட்டுள்ளது.
 
சந்தாப்பணம் செலுத்தி குறித்த விதிகளுக்கு கீழ் செயற்படுவோருக்கு வெரிஃபைட் அக்கவுண்டாக மாற்றிக் கொள்பவர்களுக்கு தனிப்பட்ட சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
 
அதாவது உங்களது அக்கவுண்ட்டை வெரிபை செய்வதற்காக சிறப்பு வெரிபிகேஷன் முறை மற்றும் ஹேக்கர்களிடமிருந்த சிறப்பு பாதுகாப்பு, ஏதேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் உங்களுக்கென தனிநபர் டெக்னிக்கல் சப்போர்ட், உங்களது கணக்கை பிரபலமாக்குவதற்கான வழிமுறைகள், இதைத் தவிர வேறு சில இதர வசதிகளும் வெரிஃபைட் யூசர்களுக்கு வழங்கபடுகின்றன. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்