AI தொழில்நுட்பத்தால் ஏற்பட இருக்கும் பேராபத்து! பில் கேட்ஸ் எச்சரிக்கை
26 பங்குனி 2023 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 8565
சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளில் மக்களிடையே மிக அதிக எதிர்பார்ப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ள முக்கியமான கண்டுபிடிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காணப்படுகின்றது.
இது மனித மூளை சிந்திப்பதை போலவே இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு தற்போது தொடக்க கட்டங்களில் இருந்தாலும், வருங்காலங்களில் அனைத்து துறைகளிலும் முக்கிய இடத்தை நிரப்பக்கூடிய தொழில்நுட்பமாக பார்க்கப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்பு பெரும்பாலான பொதுமக்கள் மத்தியிலும், அறிவியலாளர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று இருந்தாலும், சில எதிர்ப்புகளும் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்களும் பரவி வருகிறது.
இந்நிலையில் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தீய கைகளுக்கு சென்றால் கட்டுப்பாட்டு இல்லாமல் போகலாம் என்று எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களால் உற்சாகமும், உத்வேகமும் அடைந்து இருப்பதாகவும், நல்ல முறையில் பயன்படுத்தினால் கல்வி, சுகாதாரம், வணிகம், மற்றும் வாழ்க்கை முறைகளை அதிகரிக்க முடியும்.
அதே சமயம் உலகளாவிய சமத்துவமின்மை மற்றும் வறுமையை இந்த தொழில்நுட்பம் குறைக்க உதவும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் AI தொழில்நுட்பங்கள் தவறான கைகளில் விழுந்தால், அவை நிஜ வாழ்க்கை ஜேம்ஸ் பாண்ட்- பாணி வில்லன்களாக மாற்றப்பட்டு, திருத்தப்பட்ட தவறான இலக்குகளை அடைய கையாளப்படலாம்.
மேலும் சமமாக சரிபார்க்கப் படாத அதி புத்திசாலித்தனமான AI இயந்திரங்கள் ”கட்டுப்பாடு இல்லாமல் போகலாம்” அத்துடன் மனிதர்களை தங்களது அச்சுறுத்தல்களாக அவைகளே முடிவு செய்து கொள்ளலாம் என எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸின் இந்த எச்சரிக்கைக்கு முன்னதாக, டெர்மினேட்டர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் AI ரோபோக்கள் நம்மைக் கட்டுப்படுத்தலாம் என எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.