Paristamil Navigation Paristamil advert login

நபர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்! நெகிழ்ச்சி சம்பவம்

  நபர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்! நெகிழ்ச்சி சம்பவம்

21 பங்குனி 2023 செவ்வாய் 08:57 | பார்வைகள் : 8633


உலக நாடுகள் முழுவதும் ஆப்பிள் வாட்ச் தனது உயிரைக் காப்பாற்ற உதவியதாக பல ஆப்பிள் வாட்ச் பயனர்கள் தங்கள் அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அமெரிக்காவின் கக்ளீவ்லேண்டைச் சேர்ந்த ஒரு நபர், தனது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவதைக் கண்டறிந்ததற்காக தனது ஆப்பிள் வாட்சிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
 
ஜென் கூனிஹான் என்ற நபர் தனது ஆப்பிள் கடிகாரத்தை எப்போதும் அணிந்து கொண்டு உடல் நலத்தை கண்காணித்து வருகிறார்.
 
அவர் தினமும் தனது உடலின் கலோரிகள் மற்றும் இதயத் துடிப்பு பற்றிய விவரங்களை அதில் பார்த்து தெரிந்து கொள்கிறார். மேலும் அவர் தூங்கும் போது கூட அந்த கடிகாரத்தை அணிந்து கொண்டு தான் தூங்குவதாக கூறியுள்ளார்.
 
கடந்த அக்டோபர் மாதத்தில் ஜென் கூனிஹானின் ஸ்மார்ட் வாட்ச் அவர் மூச்சு விடுவது எச்சரித்துள்ளது.
 
“எனது சுவாசம் உயர்த்தப்பட்டதாக எனக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கை கிடைத்தது. 
 
எனவே அடிப்படையில் நீங்கள் நிமிடத்திற்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுவாசங்கள் இருக்கின்றன. ஆனால் அன்று எனது சுவாச எண்ணிக்கை குறைவாக இருந்தது.எனவே எனது ஸ்மார்ட் வாட்ச் என்னிடம் எச்சரித்தது," என கூனிஹான் கூறியுள்ளார்.
 
”நான் உடனே வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க துவங்கினேன். எனது மனைவி மற்றும் மகனிடம் இதுபற்றி தெரிவிக்கும் போது அவர்கள் என்னை உடனே மருத்துவமனைக்குப் போக சொன்னார்கள்.
 
மருத்துவர்கள் எனக்கு எக்ஸ்ரே எடுத்து விட்டு மூச்சு குழாய் அழற்சிக்கு மருந்து கொடுத்தார்கள். ஆனால் என் வாட்ச் மீண்டும், மீண்டும் என் சுவாசக் குறைபாட்டை எச்சரித்துக் கொண்டே இருந்தது. எனக்கு சந்தேகம் வரவே மீண்டும் மருத்துவமனைக்கு சென்றேன்.
 
அங்கே சில ஸ்கேன்களை எடுத்தார்கள். பின்னர் மருத்துவர் எனக்கு நுரையீரலில் ரத்த கட்டிகள் இருப்பதை கண்டறிந்தார். அதனை உடனே சரி செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்தென கூறினார்.
 
அதன் பின் சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது நலமாக இருக்கிறேன்” என கூனிஹான் கூறியுள்ளார்.
 
 
”மருத்துவரின் கூற்றுப்படி அன்று இரவு நான் அப்படியே தூங்கியிருந்தால் 60% சுவாசக்கோளாறால் பாதிக்கப்பட்ட காரணத்தால் நான் உயிரிழந்திருப்பேன்” என கூனிஹான் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்