யாழில் முதியவரை கடத்தி அதிர்ச்சி கொடுத்த பெண் - தீவிர விசாரணையில் பொலிஸார்
11 ஆடி 2023 செவ்வாய் 06:15 | பார்வைகள் : 10504
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில், கொடுத்த பணத்தை மீளப்பெறுவதற்காக முதியவரை கடத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு சொந்தமான காணியை அப்பகுதியை சேர்ந்த பிரிதொரு பெண்ணுக்கு விற்பனை செய்வதற்காக முன்பணமாக 15 இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் குறித்த முதியவர் நீண்டகாலமாக காணியை விற்பனை செய்யவில்லை என்பதோடு பணத்தை மீளக்கொடுப்பதற்கும் தாமதப்போக்கினை கடைபிடித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்தப் பெண், ஆண்கள் நால்வரின் உதவியுடன் முதியவரை சிற்றூந்தில் கடத்தி அச்சுறுத்தியதோடு தாக்கியும் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் முதியவர் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட ஐவரும் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan