Paristamil Navigation Paristamil advert login

Twitter பதிவு பிடித்துள்ளதா? 'டிப்ஸ்' கொடுக்கலாம்

 Twitter பதிவு பிடித்துள்ளதா? 'டிப்ஸ்' கொடுக்கலாம்

8 வைகாசி 2021 சனி 09:28 | பார்வைகள் : 14132


Twitter பதிவுகள் பிடித்திருந்தால், பயனீட்டாளர்கள் 'டிப்ஸ்', அதாவது சிறிய அன்பளிப்பாகப் பணம் கொடுக்கலாம்.
 
அந்த அம்சம் நேற்று (மே 6) அறிமுகம் செய்யப்பட்டது.
 
ஆங்கிலத்தில் பதிவுகள் செய்யும் செய்தியாளர்கள், நிபுணர்கள், லாப நோக்கமில்லாத அமைப்புகள் ஆகிய சில பயனீட்டாளர்களுக்கு மட்டும் அது தற்போது வழங்கப்பட்டுள்ளது.
 
அவர்கள் "Tip Jar" என்னும் அம்சத்தைத் தங்கள் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.
 
அந்த "Tip Jar" சின்னம், Patreon, PayPal ஆகிய பணப் பரிவர்த்தனைத் தளங்களுக்கு அழைத்துச் செல்லும்.
 
Twitterஇல் விருப்பக் குறி, பின்தொடருதல் ஆகியவற்றைத் தாண்டி, பிறருக்கு ஆதரவு அளிக்க உதவுவதற்காக அந்த அம்சம் கொண்டு வரப்பட்டதாக அந்நிறுவனத்தின் மூத்த பொருள் நிர்வாகி எஸ்தர் கிராஃபர்ட் (Esther Crawford) கூறினார்.
 
வழங்கப்படும் பணத்தில் Twitterக்கு எந்தப் பங்கும் கிடையாது என்று அவர் சொன்னார்.
 
கூடிய விரைவில் அந்த அம்சம் மேலும் பலருக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்