கடலுக்கு அடியில் கேபிள் பதிக்க பேஸ்புக் நிறுவனம் திட்டம்!
3 சித்திரை 2021 சனி 09:16 | பார்வைகள் : 9462
இன்டெர்நெட் சேவையை மேம்படுத்தும் விதத்தில், தென்கிழக்கு ஆசியா மற்றும் வடஅமெரிக்காவை இணைக்கும் விதத்தில் கடலுக்கு அடியில் கேபிள் பதிக்க திட்டமிட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் துணை தலைவர் கெவின் சல்வோதரி தெரிவித்துள்ளார்.
எக்கோ, பிப்ரோஸ்ட் என்ற இரு கேபிள் திட்டங்களை கூகுளின் ஆல்பாபெட் மற்றும் சிங்கப்பூர், இந்தோனேசியாவை சேர்ந்த தொலை தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்த இருப்பதாக அவர் கூறினார்.
ஜாவா கடல் பகுதி வழியாக செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்த உடன், பணிகள் தொடங்கி, 2023 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று அவர் தெரிவித்தார்.