ஒரு பில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட PUBG Mobile!
27 பங்குனி 2021 சனி 07:39 | பார்வைகள் : 9001
சீனத் தொழில்நுட்ப நிறுவனம் Tencent, அதன் PUBG Mobile என்ற விளையாட்டுச் செயலி, 2018ஆம் ஆண்டிலிருந்து மொத்தம் 1 பில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
PlayerUnknown's Battlegrounds என்ற விளையாட்டின் திறன்பேசிக்கான வகையே PUBG Mobile. அதில், ஒரு குழுவில் உள்ளவர்கள் ஒருவருடன் இன்னொருவர் சண்டை போடுவர்.
விளையாட்டில், குழுவில் யார் கடைசியாக உயிருடன் இருக்கிறாரோ, அவரே வெற்றியாளர். அவ்விளையாட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.
தற்போது, உலகில் ஆக அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட விளையாட்டுகள் Subway Surfers, Candy Crush Saga ஆகியவை ஆகும். அந்த இரு விளையாட்டுகளுக்கு அடுத்த படியாக PUBG Mobile உள்ளது எனப் பகுப்பாய்வு நிறுவனம் Sensor Tower குறிப்பிட்டது.
Tencent நிறுவனம், விளையாட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பாதி, வெளிநாடுகளிலிருந்து வருவதாகக் கூறியுள்ளது.