Paristamil Navigation Paristamil advert login

டுவிட்டரில் அறிமுகமாகவுள்ள 5 புதிய வசதிகள்

டுவிட்டரில் அறிமுகமாகவுள்ள 5 புதிய வசதிகள்

6 பங்குனி 2021 சனி 08:48 | பார்வைகள் : 9262


முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டரினை பல மில்லியன் வரையான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 
இத் தளத்தில் அவ்வப்போது புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
 
இந்த வரிசையில் 2021 ஆம் ஆண்டு 5 புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இவற்றில் Communities எனும் வசதியும் ஒன்றாகும்.
 
இவ் வசதியின் ஊடாக பயனர்கள் தாம் விரும்பிய தலைப்பு அல்லது இருக்கும் இடத்தினை அடிப்படையாகக் கொண்டு பயனர்களை ஒன்று சேர்க்க முடியும்.
 
அதேபோன்று Super Follows எனும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
இதன் மூலம் பின்தொடருனர்கள் தாம் விரும்பியவர்களை மிகவும் பிரபலமானவர்களாக்குவதற்கு உதவ முடியும்.
 
இவற்றிற்கு அடுத்ததாக Safety Mode எனும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
இவ் வசதியினை ஆக்டிவேட் செய்திருப்பின் டுவிட்டரின் ஒழுங்குவிதிகளை மீறுபவர்களின் கணக்கு தானாகவே ப்ளொக் செய்யப்படும்.
 
இதேபோன்று நான்காவதாக Business Profiles எனும் வசதி அறிமுகம் செய்யப்படுகின்றது.
 
இதன் மூலம் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படும் டுவிட்டர் கணக்குகளை தனித்துவமாக அடையாளம் காண முடியும்.
 
ஐந்தாவதாக Audio Spaces எனும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
இதன் மூலம் பயனர்கள் தமது சட் ரூமினுள் ஆடியோக்களை மாத்திரம் பயன்படுத்த முடியும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்