11 வண்ணங்களில் வெளியாகும் Samsung Galaxy S21 Series

9 தை 2021 சனி 05:55 | பார்வைகள் : 14403
சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி S21 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. S21, S21 பிளஸ் மற்றும் S21 அல்ட்ரா என மூன்று வெர்ஷனாக இது வெளியாக உள்ளது. 128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரியில் இந்த போன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீரிஸ் போன்கள் மொத்தமாக 11 வண்ணங்களில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாக், பிராவுன் , கோல்ட், கிரே, நாவி, பிங்க், ரெட், சில்வர், டைட்டானியம், வொய்லெட் மற்றும் வெள்ளை நிறங்களில் வெளியாகிறது இந்த ஸ்மார்ட் போன்.
சந்தையில் நிலவும் போட்டியை சமாளிக்க சாம்சங் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாம். இருப்பினும் இந்த வண்ண போன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெளியாகாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி 14 முதல் வெவ்வேறு கட்டங்களாக இந்த போன்கள் வெளியாக உள்ளனவாம். இதில் சில வண்ண போன்களின் சிறப்பம்சங்கள் மாறவும் வாய்ப்புள்ளதாம். கிரே மற்றும் பிளாக் போன்களில் 5ஜி வசதி இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளதாம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1