Paristamil Navigation Paristamil advert login

டுயோ மற்றும் கூகுள் மீட் மூலம் 1 ட்ரில்லியன் நிமிடங்களுக்கு வீடியோ கால்கள்

டுயோ மற்றும் கூகுள் மீட் மூலம் 1 ட்ரில்லியன் நிமிடங்களுக்கு வீடியோ கால்கள்

28 மார்கழி 2020 திங்கள் 07:56 | பார்வைகள் : 9011


கொரோனா பெருந்தொற்று உலக மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி போட்ட நிலையில் கூகுள் நிறுவனத்தின் கூகுள் டுயோ மற்றும் கூகுள் மீட் மூலமாக ஒரு ட்ரில்லியன் நிமிட வீடியோ கால்கள் உலகம் முழுவதும் தொகுக்கப்பட்டுள்ளன. 

 
தினந்தோறும் கூகுள் மீட் மற்றும் டுயோ அப்ளிகேஷன்களை சுமார் 100 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருவதாக சொல்லப்பட்டுள்ளது. நடப்பாண்டின் மூன்றாவது பாதியில் இந்த எண்ணிக்கை 235 மில்லியன் பயனர்களாக அதிகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த ஏப்ரல் மற்றும் மே மாத காலத்தில் மட்டும் கூகுள் மீட்டில் 3 மில்லியன் பயனர்கள் நாள் ஒன்றுக்கு இணைந்துள்ளனர். 
 
“பயனர்களின் பிரைவசி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வீடியோ காலிங் அப்ளிகேஷன்களை வடிவமைத்தோம். இதன் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்ற சந்திப்பு கூட்டங்கள் மற்றும் வீடியோ கால்கள் பாதுகாப்பாகவும், அது சார்ந்த தகவல்கள் பத்திரமாகவும் இருக்கும். 
 
வரும் 2021 மார்ச் 31 வரை ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி பயனர்கள் அன்லிமிடெட் கால்களை மேற்கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார் கூகுள் டுயோ மற்றும் மீட் தயாரிப்பு பிரிவு மேலாண் இயக்குனர் டேவ் சிட்ரோன். 
 
கூகுள் நிறுவன பயன்பாடு சுமார் 30 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார் அதன் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்