Whatsapp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
23 மார்கழி 2020 புதன் 10:36 | பார்வைகள் : 9439
இப்போது நம் வாழ்க்கை முறையில் வாட்ஸ்அப் (WhatsApp) ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. உலகம் முழுவதும் பலஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு ஆப்ஸ்கள் இருந்தாலும், வாட்ஸ்அப் (Whatsapp) மிகவும் பிரபலமானது. ஏனென்றால், அதன் பயனர்களுக்கு அனைத்து வகையான வசதிகளையும் வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் உண்மையில் முயற்சிக்கிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் (Facebook-owned WhatsApp) நீண்ட காலமாக வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப்ஸ் மற்றும் வாட்ஸ்அப் வெப் கிளைண்டிற்கான (WhatsApp desktop app and WhatsApp Web client) வாய்ஸ் / வீடியோ அழைப்பு (voice/video calling) அம்சத்தில் செயல்படுவதாக வதந்தி பரவி வந்தது.
பல மாதங்களுக்கு பிறகு, இந்தத் தளத்தை பற்றிய வதந்தியை, உண்மையாக்க நிறுவனம் மெதுவாக அதற்கான வேலைகளை செய்து வருவதாக தெரிகிறது. WABetaInfo ல் வெளியான தகவல்படி, வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு (voice/video calling) அம்சம் பீட்டா வடிவத்தில் (beta form) கிடைக்கிறது, அதாவது வாட்ஸ்அப் நிறுவனம் அதன் செயல்பாட்டை மேம்படுத்த இப்போது மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது. அதன் வெப் மற்றும் டெஸ்க்டாப் இயங்குதளங்களில் இது முழுமையாக சோதிக்கப்பட்டவுடன், ஜூம், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் கூகுள் மீட் (Zoom, Microsoft Teams, and Google Meet) போன்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.
இருப்பினும், வாட்ஸ்அப் ஆப்ஸில் உள்ள வீடியோ மற்றும் வாய்ஸ் அழைப்பு மிகவும் வித்தியாசமாக இயங்குகிறது, ஏனெனில் இங்குள்ள பயனர்கள் அம்சத்தை அனுபவிக்க குறிப்பிட்ட அந்த தளத்தில் இருக்க வேண்டும், மற்ற கான்பரன்சிங் தளங்களைப் (conferencing platforms) போலல்லாமல், வீடியோ பங்கேற்பாளர்கள் பதிவுபெறாமல் சேர இது அனுமதிக்கிறது. அறிக்கையில் கிடைக்கும் படங்களின்படி, பயனர்கள் உள்வரும் வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்பை (incoming voice or video call) பெறும்போதெல்லாம் ஒரு தனி சாளரம் வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் ஆப்ஸில் தோன்றும். அதேசமயம், வெளிச்செல்லும் அழைப்பை (outgoing call) செய்ய, பயனர்கள் சாட்டை (Chat) திறந்து, மேல் வலதுபுறத்தில் அழைப்பு அல்லது வீடியோ ஐகானைத் (Select the call or video icon at the top right) தேர்ந்தெடுக்க வேண்டும்.
வாட்ஸ்அப் குழுக்களில் (WhatsApp groups) இந்த அம்சம் ஒரே மாதிரியாக செயல்படக்கூடும், இருப்பினும் ஒரு கான்பரன்சிங் அழைப்பின் போது எத்தனை பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கான (Android and iOS) வழக்கமான வாட்ஸ்அப் குழு வீடியோ மற்றும் குரல் அழைப்பின் போது எட்டு உறுப்பினர்களை (Eight members during a group video and voice call.) அனுமதிக்கிறது. வாட்ஸ்அப் வெப்பில் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான (voice and video calls on WhatsApp web) ஆதரவு உலகெங்கிலும் உள்ள பயனர்களிடமிருந்து மிகவும் கோரப்பட்ட அம்சமாகும்.
தற்போதைய நிலவரப்படி, நிலையான வாட்ஸ்அப் வெப் அல்லது டெஸ்க்டாப் சேனலில் (WhatsApp Web or Desktop channel) இந்த அம்சம் கிடைப்பது குறித்து எந்த விவரங்களையும் வாட்ஸ்அப்போ அல்லது பேஸ்புக்கோ (WhatsApp or Facebook) பகிர்ந்து கொள்ளவில்லை.கடந்த சில மாதங்களாக, நிறுவனம் இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள அதன் மிகப்பெரிய பயனர் தளத்திற்கான புதிய மேம்பாடுகளைச் சேர்த்தது. உதாரணமாக சமீபத்தில், வாட்ஸ்அப் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கியது, இது பயனர்களுக்கு ஆப்ஸ் அறிவிப்புகளைப் பெற உதவுகிறது.
மேலும் சமீபத்தில், பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் ஆப்ஸ் ஆன வாட்ஸ்அப் In-App Notifications என்ற புதிய அம்சத்தையும் வெளியிட்டுள்ளது. யுபிஐ பேமண்ட்களை (UPI payments) செயல்படுத்த இந்தியாவில் 20 மில்லியன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பேமெண்ட் (WhatsApp Payments) அம்சம் இப்போது கிடைக்கிறது. வரவிருக்கும் 2021 புத்தாண்டிலும், எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் Whatsapp நிறுத்தப்படும் என்ற பட்டியலை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
Appleன் iPhone 4, iPhone 4S, iPhone 5, iPhone 5S, iPhone 6 மற்றும் iPhone 6S ஆகியவை இயக்க முறைமை iOS 9 உடன் புதுப்பிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் (Whatsapp) இயங்காது. இந்த பாதுகாப்பான வாட்ஸ்அப் பேமெண்ட் (WhatsApp Payments) முறை ஒரு செய்தியை அனுப்புவது போலவே பணத்தை அனுப்புவதையும் எளிதாக்குகிறது. மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினருக்கு பாதுகாப்பாக பணத்தை அனுப்பலாம். நேரில் பணத்தை பரிமாறிக் கொள்ளாமலோ அல்லது உள்ளூர் வங்கிக்குச் செல்லாமலோ சேர்ந்து வாங்கும் பொருட்களின் விலையை தூரத்திலிருந்து பகிர்ந்து கொள்ளலாம், என்று WhatsApp கூறியது. இதுபோன்ற பல அம்சங்களை நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு அளித்துவருகிறது.