பேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
16 மார்கழி 2020 புதன் 15:33 | பார்வைகள் : 10843
ஆப்பிரிக்க நாடுகளை குறிவைத்து அவதூறு பிரச்சாரம் நடத்தும் 3 நெட்வொர்க்குகளை தனது அனைத்து தளங்களில் இருந்தும் ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
இந்த நெட்வொர்க்குகளை சேர்ந்தவர்களுக்கு பிரெஞ்சு ராணுவம் மற்றும் ரஷ்யாவின் இன்டர்நெட் ஆய்வு அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பின்னர் நடந்த விசாரணையில் அது நிரூபிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதே நேரம் இந்த நெட்வொர்க்குகள் ஃபேஸ்புக்கின் விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக அதன் பாதுகாப்பு கொள்கை அதிகாரி தெரிவித்துள்ளார்.
84 ஃபேஸ்புக் கணக்குகள்,14 இன்ஸ்டாகிராம் ஆகியன இந்த நெட்வொர்க்குகளால் கையாளப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்ய இன்டர்நெட் ஆய்வு அமைப்பு கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.