Paristamil Navigation Paristamil advert login

குரோம் உலாவியில் புதிய வசதி!

குரோம் உலாவியில் புதிய வசதி!

30 கார்த்திகை 2020 திங்கள் 12:10 | பார்வைகள் : 9702


 

 
அன்ரோயிட் சாதனங்களில் அதிகளவாக கூகுள் குரோம் உலாவியே பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
இவ் உலாவியில் Incognito Mode எனும் வசதியும் காணப்படுகின்றது.
 
இதன் மூலம் கடவுச் சொற்கள் சேமிக்கப்படாத முறையிலும், குக்கீஸ் சேமிக்கப்படாத முறையிலும் குரோம் உலாவியினை பயன்படுத்த முடியும்.
 
இதேவேளை பாதுகாப்பு நோக்கத்திற்காக Incognito Mode வசதியில் இருக்கும்போது ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத நிலை இதுவரை காணப்பட்டது.
 
எனினும் இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி புதிய கூகுள் குரோம் பதிப்பில் Incognito Mode வசதியில் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இவ் வசதி குரோம் உலாவியில் உள்ளதா என்பதை பரிசீலிக்கவும் முடியும்.
 
இதற்கு Chrome Canary உலாவியில் இணைய முகவரி உட்புகுத்தும் பகுதியில் chrome://flags என்பதை தட்டச்சு செய்து Enter செய்யவும்.
 
இப்போது Incognito Screenshot என Search செய்யவும்.
 
இதற்கான பெறுபேறு காண்பிக்கப்படின் அதனை Enable செய்யவும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்