கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ரோபோ!
26 கார்த்திகை 2020 வியாழன் 14:15 | பார்வைகள் : 10113
ஜப்பான் நாட்டில் கடையில் ரோபோ ஒன்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்கிறது.
ரோபோவீ என்று பெயரிடப்பட்ட அந்த ரோபோ வாடிக்கையாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பேசி அசத்துகிறது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முக கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றும்படி கூறுகிறது.
இதற்காக ரோபோவுடன் இணைக்கப்பட்டுள்ள கேமிரா மற்றும் முப்பரிமாண லேசர் அலைக்கற்றை தொழில் நுட்ப உதவியுடன் இந்த பணிகளை ரோபோவீ மேற்கொள்கிறது.
மேலும் கடையில் வாடிக்கையாளர்கள் தேவையான உடைகளை தேர்வு செய்யவும் இந்த ரோபோ உதவி புரிகிறது.