Whatsapp சாட்களை கூகுள் டிரைவில் பேக் அப் செய்வது ஆபத்து!
28 புரட்டாசி 2020 திங்கள் 08:01 | பார்வைகள் : 9469
வாட்ஸ் ஆப் உரையாடல்களை பேக் அப் எடுத்து கூகுள் டிரைவில் சேமிப்பது பாதுகாப்பானதல்ல என்ற தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தினசரி பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலியில் உள்ள சாட்கள் அழிந்துபோகாமல் இருக்க அவற்றை கூகுள் டிரைவ் மற்றும் ஐ-கிளௌடு (Google Drive and iCloud) உள்ளிட்டவற்றில் பாதுகாப்பாக சேமித்து வைப்பது வழக்கம். ஆனால், இவ்வாறு சேமிக்கப்படும் தகவல்கள் வேறொரு நபரால் ஹேக் செய்யப்பட்டு படிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் ஆப் செயலி வழங்கும் எண்டு டூ எண்டு பாதுகாப்பு பயன்பாடு (end-to-end encryption), உரையாடல்கள் வாட்ஸாப் செயலியில் இருக்கும்வரையில் மட்டுமே பாதுகாப்பு அம்சத்தை வழங்கும் என்றும், உரையாடல்களை நாம் இ-மெயிலிலோ, பென் டிரைவ் உள்ளிட்ட சாதனங்களிலோ சேமிக்கும்போது அவை மற்றவரால் ஹேக் செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.