TikTokஐ Microsoftக்கு விற்க மறுப்பு!

14 புரட்டாசி 2020 திங்கள் 11:16 | பார்வைகள் : 11419
Microsoft நிறுவனம், TikTok செயலியை வாங்க முன்வைத்த கோரிக்கையை ByteDance நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதில் Oracle நிறுவனத்துடன் கைகோக்க அது திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசதந்திரப் பூசல் TikTok செயலியை மையப்படுத்தி மேலும் தொடர்கிறது.
அமெரிக்க நிறுவனங்கள் ByteDance நிறுவனத்துடனான தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
அதனால், தன் செயலியை அமெரிக்க நிறுவனங்களிடம் விற்கவேண்டிய நிர்ப்பந்தம் ByteDanceக்கு.
Microsoft, Oracle இரண்டும் அதை வாங்க முயற்சி செய்தன.
தான் வாங்கியிருந்தால், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேராமல், பயனீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயலியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்திருக்கலாம் என்றது Microsoft.
Oracle உடன் கூட்டுசேர்ந்துள்ள ByteDance,அமெரிக்கத் தடையை எதிர்நோக்காமலும், அதேநேரத்தில் சீன அரசாங்கத்தை அமைதிப்படுத்தவும் அந்த முடிவு உதவும் என்று ByteDance நம்புகிறது.
இதற்கிடையில், அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக TikTok வழக்குத் தொடுத்துள்ளது. அதிபர் டிரம்ப்பின் நிர்வாக ஆணை, அனைத்துலக நெருக்கடிநேரப் பொருளியல் அதிகாரச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அது குறிப்பிட்டது.
சீன அரசாங்கத்துக்குத் தகவல் பகிர்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அது தொடர்ந்து மறுத்து வருகிறது.
சுமார் 175 மில்லியன் முறை அமெரிக்காவில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்தச் செயலி, உலகம் முழுவதும் பல பில்லியன் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.