யூ டியூப்பில் இருந்து 1.50 கோடி வீடியோக்கள் நீக்கம்!
27 ஆவணி 2020 வியாழன் 06:33 | பார்வைகள் : 8907
வன்முறை அல்லது தவறான தகவல்களைக் கொடுத்துள்ளதாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஒரு கோடியே 40 லட்சம் வீடியோக்களை நீக்கியிருப்பதாக யூ டியுப் நிறுவனம் தெரிவித்துள்ளது.'
கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை சுமார் 50 லட்சம் வீடியோக்கள் மட்டும் நீக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத நிலையில் தற்போது அதிக வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாக யூ டியூப் நிறுவனம் கூறியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள், பாலியல் சித்தரிப்புகள், மோசடிகள் அல்லது தவறான தகவல்களை பரப்புதல், துன்புறுத்தல் அல்லது இணைய அச்சுறுத்தல், வன்முறை, தீவிரவாதம் அல்லது வெறுப்புணர்வை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வீடியோக்கள் அகற்றப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.