ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடித் திட்டம்!
24 ஆவணி 2020 திங்கள் 14:33 | பார்வைகள் : 9476
பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படும் ஐபோன்களின் விலை அதிகமாகவே இருக்கும்.
இப்படியிருக்கையில் இவ்வருடத்தின் இறுதியில் 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட புதிய ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.
இவற்றினை விலை மேலும் அதிகமாகவே இருக்கும் என்பதால் பயனர்கள் குறித்த கைப்பேசிகளை கொள்வனவு செய்வதில் குறைவாகவே ஆர்வம் காட்டுவர்.
5G தொழில்நுட்பத்தினை உட்புகுத்தும்போது ஒரு கைப்பேசிக்கான செலவு 75 டொலர்கள் முதல் 85 டொலர்கள் வரை அதிகரிக்கும்.
இதனைத் தவிர்ப்பதற்காக இக் கைப்பேசிகளின் விலையை சற்று குறைப்பதற்கு ஆப்பிள் தீர்மானித்துள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக குறைந்த விலையிலான மின்கலங்களை iPhone 12 5G கைப்பேசிகளில் பயன்படுத்தவுள்ளது.
இதனால் விலையை குறைக்க முடியும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கின்றது.