புதிய ஸ்மார்ட் தொலைபேசியின் புகைப்படத்ததை வெளியிட்ட மைக்ரோ சொப்ட்!
12 ஆவணி 2020 புதன் 14:17 | பார்வைகள் : 9208
மைக்ரோ சொப்ட்(Microsoft) நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட் தொலைபேசியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
அண்ரோமெடா (Andromeda) என்ற பெயரில் தயாராகும் சர்பேஸ் டுயோ மொடலை (Surface Duo ) மைக்ரோசொப்ட் நிறுவனம் இவ்வாண்டின் இறுதியில் அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஸ்மாரட் தொலைபேசியின் அன்ரொய்ட் இயங்குதளத்தின் கஸ்டமைஸ் செய்யப்பட்ட வெர்ஷனை கொண்டுள்ளது.
மேலும் இதன் யூசர் இன்டர்பேஸானது விண்டோஸ் 10 யினை போன்று காட்சியளிக்கிறது.
இதுவரை வெளியான தகவல்களின் படி சர்பேஸ் டுயோ மொடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 11 எம்பி பிரைமரி கேமரா, 5.6 இன்ச் அளவில் இரு ஸ்கிரீன்கள். இவ் ஸ்கிரீன்களில் ஒரே சமயத்தில் இரண்டு செயலிகளை இயக்க வசதி கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.